ஐப்பசி நெருங்கியபோதும்
அடைமழை கொட்டாமல்
வெயில் சுட்டெரிக்கும்
அந்தப் பெருநகரச் சாலைகளும்
எங்குதான் செல்வார்களோ
என எண்ணத்தோன்ற வைத்து
இருபுறமும் விரைந்திருந்த
வாகனங்கள் கிளப்பிவிட்டிருந்த
புகையும்
அந்தப் பாலித்தீன் குப்பைகளும்
வரண்ட புழுதிக்காற்றில்
அவை எழுந்து அடங்கும்போது
ஒன்றிரண்டு குப்பைகள்
ஒவ்வொரு முறையும் தஞ்சம் புகும்
நீர்நிலைகளும்
அவை தஞ்சம் புகுந்து நஞ்சாக்கிய
நேற்றைய நீ்ர்நிலைகளில்
பஞ்சம் புகுந்து வரண்டபின்பு
தோண்டத்தோண்ட கிடைக்காமல்
மாண்ட நீருக்கான சமாதியென
வானுயர வளர்ந்திருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்புகளும்
உரக்கச் சொல்லும் உண்மை
மீயொலியாய் மாறிப்போனதாலோ என்னவோ
எவர் காதுகளுக்கும் எட்டாமல் போய்விட
அமைதியாய் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது
நக(ர)ர(க)மயமாதல்
Sunday, 9 October 2016
நக(ர)ர(க)மயமாதல்
Subscribe to:
Posts (Atom)